சென்னையை உருவாக்கிய தாமல் வன்னிய நாயக்கர்கள் - HISTORY OF CHENNAI WITH DAMAL VANNIYA NAYAKAR
சென்னையை உருவாக்கிய தாமல் வன்னிய நாயக்கர்கள்: மாத்தெரையன்(மாதிரையன் ) பட்டினம் மாதரசன் பட்டினம் என்று பல்லவன் திரையன் தொண்டைமான் பெயரால் அழைக்கப்பட்ட மயிலை கடற்கரை நகரம். பின்னர் பிரிட்டிஷ்,பிரெஞ்சு ,டச்சு வணிகர்களின் வாரத்தை உச்சரிப்பில் மதராஸ் என்று பெயர் மாற்றம் செய்து அழைக்கப்பட்டது. மாத்தெரயன் - மாதிரையன் பட்டினம்: கிபி 7 ம் நூற்றாண்டு பல்லவன் - நரசிங்க போத்தரையன் 18 ம் ஆண்டு கல்வெட்டு மயிலாப்பூர் பகுதியை மாத்தெரயன் (மாதிரையன்) பட்டினம் பகுதியை சேர்ந்த சமண முனி மாணாக்கர் நற் கெளதமன் என்று குறிப்பிட்டு உள்ளது. ஏழாம் நூற்றாண்டு காலத்தில் இருந்து மாதிரையன் பட்டினம் என்று அறியப்பட்ட மயிலாப்பூர் பகுதி . மாதரசன் பட்டினம் : கி பி 1396 ம் ஆண்டு கண்டர கூளி மாராயனின் பெண்ணேஸ்வரமடம் கல்வெட்டு கூறும் கடற்கரை பட்டினங்கள் : சதிரான(சதுரங்கப்பட்டினம்), புதுப்பட்டினம், ம...